குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள ஓட்டல், டீக்கடை, தனியார் நிறுவனம் போன்றவற்றில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவதாக மாநகர காவல் சிறார் உதவி பிரிவுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், மேற்கண்ட பகுதியில் உள்ள கடைகள், தனியார் நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை செய்ததில் 6 சிறுவர்கள் பணிபுரிவது தெரியவந்தது. அவர்களை மீட்டனர். மேலும், அவர்களை வேலைக்கு அமர்த்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>