×

இளம்பெண்ணிடம் ரூ.1.3 லட்சம் அபேஸ்

செங்கல்பட்டு: சிங்கபெருமாள்கோயில் வன்னியர் நகரை சேர்ந்தவர் சன்யாசி. இவரது மனைவி தனலட்சுமி (25). இந்நிலையில், தனலட்சுமியின் குடும்பத்துக்கு பணம் தேவைப்பட்டது. இதனால், சிங்கபெருமாள்கோயிலில் உள்ள அரசு கூட்டுறவு வங்கியில் நகைகளை அடகு வைக்க நேற்று காலை மொபட்டில் புறப்பட்டார். அங்கு நகைகளை அடகு வைத்து ரூ.1.3 லட்சம் பெற்றார். பின்னர், பணத்தை பையில் வைத்து கொண்டு, வெளிேய வந்த அவர், மொபட்டை எடுக்க சென்றார்.
அப்போது, அங்கு வந்த மர்மநபர், கீழே கிடந்த 10 ரூபாய் நோட்டை காண்பித்து உங்களது பணம்விழுந்துவிட்டது என கூறினார். அதை எடுக்க முயன்றபோது, அவரது கையில் இருந்த பணப்பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார். இதுகுறித்து மறைமலைநகர் போலீசில், தனலட்சுமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து மர்மநபரை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
× RELATED கொடைக்கானல் - வத்தலக்குண்டு சாலையில் 50...