×

நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த டாரஸ் லாரி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாரஸ் லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் அருகே சென்னை - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் ஒரு டாரஸ் லாரி வந்தது. அதில், இருந்த டிரைவர், கீழே இறங்கி அருகில் உள்ள தாபா ஓட்டலில் சாப்பிட சென்றார். டிரைவர் சென்ற சிறிது நேரத்தில், திடீரென லாரியின் முன்பக்க இன்ஜின் பகுதியில் புகை வந்தது. சில நிமிடங்களில் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதை கண்டதும், சாப்பிட்டு கொண்டிருந்த டிரைவர், அலறியடிடித்து கொண்டு ஓடிவந்தார். தகவலறிந்து காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் வந்து, நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள், லாரியின் முன்பக்கம் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடுபோல் காட்சியளித்தது. புகாரின்படி காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : road ,
× RELATED ரிஷபம்