×

கஞ்சா கடத்திய பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

திருவள்ளூர்: எளாவூர் சோதனை சாவடியில் கடந்த 25.9.2018 அன்று காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த தஞ்சாவூர் மாவட்டம் சாலியகுளக்கரை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கண்ணுசாமி மனைவி சரோஜா(45) 22 கிலோ கஞ்சாவை கடத்தியதால் அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குறித்த விசாரணை சென்னை முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் செந்தில்மூர்த்தி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தேன்மொழி நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், 22 கிலோ கஞ்சா கடத்திய குற்றத்திற்காக சரோஜாவிற்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சரோஜாவை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Cannabis smuggler ,prison ,
× RELATED நன்னடத்தை மீறிய ரவுடிகளுக்கு சிறை