- யூனியன் அரசு
- திண்டுக்கல்
- திண்டுக்கல் கலெக்டர்
- கிராம அபிவிருத்தித் துறை அலுவலர்கள் சங்கம்
- மகுடபதி
- மாவட்ட செயலாளர்
- Arunprasad
திண்டுக்கல், டிச. 31: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மகுடபதி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் அருண் பிரசாத் கோரிக்கை விளக்க உரை நிகழ்த்தினார். மாநில துணை தலைவர் வீரகடம்ப கோபு வாழ்த்துரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய மசோதாவை திரும்ப பெற வேண்டும்.
அத்திட்டத்திற்கு குறைக்கப்பட்ட நிதியை மீண்டும் வழக்கம்போல் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் கவிதா நன்றி கூறினார்
