×

லாரியில் டீசல் திருடிய 2 பேர் கைது

வேடசந்தூர், டிச. 31: கரூர் மாவட்டம், கடவூரை சேர்ந்தவர் குணசேகரன் (41). லாரி டிரைவர். இவர் தூத்துக்குடியில் இருந்து லாரியில் சுண்ணாம்பு கல் ஏற்றி கொண்டு கரூர் சென்று கொண்டிருந்தார். வேடசந்தூர் அருகே சத்திரபட்டி நான்கு வழிச்சாலையில் வந்த போது ஓய்வு எடுப்பதற்காக லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு தூங்கினார். அப்போது மர்ம நபர்கள் லாரியில் இருந்த 400 லிட்டர் டீசலை திருடி சென்று விட்டார். இதுகுறித்து குணசேகரன் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.

இதன்பேரில் எஸ்ஐ பாலசுப்ரமணியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது நிலக்கோட்டை விளாம்பட்டியை சேர்ந்த ஜெயராஜ்(43), ஆவாரம்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

Tags : 2 ,Vedasanthur ,Gunasekaran ,Kadavur, Karur district ,Karur ,Thoothukudi ,Chhatrapati ,-lane highway ,
× RELATED துவரங்குறிச்சி அருகே சாலையை சீரமைக்க கேட்டு மக்கள் மறியல்