×

நோய் தாக்குதலை தடுக்க நெற்பயிர்களுக்கு மருந்து தெளிப்பு பணி தீவிரம்

புதுக்கோட்டை,டிச.31: நோய் தாக்குதலை தடுக்க நெற்பயிர்களுக்கு டிரோன், ஸ்பிரேயர் மூலம் விவசாயிகள் மருந்து தெளித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 5000 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடியாக நெல் ரங்களை பயிர் செய்துள்ளனர். கடந்த மாதம் பெய்த தித்வா புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்தது.

இதில் ஆலங்குடி, கீரனூர், அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை, திருமயம், கறம்பக்குடி ஆகிய பகுதியில் நெற்பயிர்களில் மழைநீர் தேங்கியது. உடனடியாக தண்ணீர் வடியாததால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் விவசாயிகள் கடன் வாங்கி, உரங்கள் தெளித்து பயிர்களை காப்பாற்றினர்.

மழையில் மூழ்கிய பயிர்கள் நோய் தாக்குதலில் இருந்து தடுக்க டிரோன் , ஸ்பிரேயர் மூலம் விவசாயிகள் மருந்து தெளித்து வருகின்றனர். பாசனத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே விவசாயத்திற்கு போதிய நீரை பெறவும், கூடுதல் உரம் கிடைக்கவும் புதுக்கோட்டை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Pudukottai ,Pudukottai district ,
× RELATED துவரங்குறிச்சி அருகே சாலையை சீரமைக்க கேட்டு மக்கள் மறியல்