×

மீஞ்சூர் அருகே ஏரியில் மூழ்கி அண்ணன், தங்கை பலி

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி ஊராட்சி செம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் தருண்(17). கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு படித்தார். இவரின் தங்கை தேவி(14). அத்திப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தாள். இந்நிலையில், நேற்று மதியம் இருவரும் அத்திப்பட்டு அருகே உள்ள பாலமேடு ஏரியில் குளிக்க சென்றனர். அப்போது, சாம்பல் கலந்த சேற்றில் சிக்கி இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைக் கண்ட அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் பொன்னேரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் பொன்னேரி தீயணைப்புத் துறை உதவி ஆய்வாளர் சம்பத் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று நீரில் மூழ்கி இறந்த அண்ணன், தங்கை உடல்களை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மூழ்கி அண்ணன், தங்கை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : Brother ,lake ,Minsur ,
× RELATED விடுமுறை நாளில் சுற்றுலா வந்தபோது...