×

தாராபுரம் அருகே தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்

தாராபுரம் ஜன. 22: தாராபுரம் அடுத்துள்ள நாரணாபுரத்தில் ஒன்றிய தி.மு.க. மற்றும் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து பேசுகையில், தமிழக அரசின் தவறான கொள்கைகளால் தமிழக மக்களின் வாழ்க்கை தரம் 10 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளது. இனிமேலும் இதுபோன்ற ஒரு தவறை தப்பித்தவறி செய்து விட வேண்டாம்.

விவசாய கடன்கள் தள்ளுபடி செய்ய கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்ய கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய மீண்டும் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தமிழ் நாட்டில் மலர வேண்டும், என்றார் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் பேசினார். கூட்டத்தில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சசிகுமார், வீர சுந்தரி பழனிச்சாமி, வக்கீல் செல்வராஜ், தகவல் தொழில் நுட்ப அணி அன்பழகன், ஆனந்தி, அமுதா, உட்பட ஒன்றிய தி.மு.க. மற்றும் சார்பு அமைப்புகளைச் சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Tarapuram ,meeting ,Village Council ,
× RELATED தாராபுரம் அருகே வாக்காளர்களுக்கு...