குளித்த டிரைவர் சாவு

காங்கயம், ஜன. 22: தர்மபுரி மாவட்டம், பெரியப்பட்டி, மந்திக்குலம்பட்டிதியை சேர்ந்த பெருமாள் மகன் ஆலடியான்(44). லாரி டிரைவராக பணிபுரிந்தார்,. இந்த நிலையில் நேற்று காங்கயம் - முத்தூர் சாலையில் உள்ள மிதிப்பாறை பகுதியில் செல்லும் பிஏபி வாய்க்காலில் லாரியை நிறுத்தி விட்டு குளிக்க சென்றார்.

குளித்துக்கொண்டிருக்கும் போது  நிலைதடுமாறி வாய்க்காலில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டார். அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயற்சி செய்தும்  பலனில்லாமல்  பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவயிடம் வந்த காங்கயம் போலீசார் ஆலடியான் சடலத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>