20 பேருக்கு தொழிற்கடன்

திருப்பூர், ஜன. 22: தமிழக அரசு புத்தாக்க திட்டம், கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு திருப்பூர் மாவட்டத்தில் ஐந்து ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மாநில மற்றும் மத்திய அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடித்தோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தொழில் துவங்க கடனுதவி வழங்கப்படுகிறது.அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில், கனரா வங்கியின் தொழிற் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்ற 20 பேருக்கு 18.75 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது. கடன் உதவியை வழங்கி கலெக்டர் விஜயகார்த்திகேயன் பேசுகையில், இளம் தொழில் முனைவோர் துவங்கும் தொழில்கள் லாபமும், வேலை வாய்ப்பும் வழங்குவதாக இருக்க வேண்டும். நிலைத்த தன்மையுடன் சிறப்பாக நிறுவனங்கள் செயல்பட வேண்டும், என்றார்.

பிஏபி வாய்க்காலில்

Related Stories:

>