போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தண்டனையை கடுமையாக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திருத்தணியில் வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டிய, வீடியோ எடுத்து ‘ரீல்ஸ்’ஆக வெளியிட்டுள்ளனர். 17 வயதுடைய சிறுவர்கள் பிறரை அரிவாளால் வெட்டுவதும், அதனை வீடியோவாக எடுத்து வெளியிடுவதற்குமான தைரியம் எங்கிருந்து வந்தது?

இதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் விருத்தாச்சலத்தில் 3 இளைஞர்கள் ஒரு வாலிபரை முட்டி போட வைத்து, கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர். இதற்கு காரணம் கஞ்சா போன்ற போதை பொருட்கள் பழக்கம் தான்.

எனவே தமிழக அரசு போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக தண்டனைகளை கடுமையாக்குவதுடன், ஆபத்தான போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருக்கும் பகுதியில் உள்ள காவல் நிலைய அதிகாரிகளும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: