×

வீரபாண்டியில் இன்று மின்தடை

திருப்பூர், ஜன. 22: திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் அறிக்கை: சந்தைப்பேட்டை துணைமின் நிலையத்தில் இன்று (22ம் தேதி) கம்பி மாற்றும் பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட செந்தூரன் கார்டன், கிருஷ்ணா நகர் கிழக்கு மற்றும் மேற்கு, அமராவதி நகர், கல்லாங்காடு 1 முதல் 7 வீதிகள், வாய்க்கால் மேடு, கே.எம்.சிவசுப்பிரமணியம் நகர், முத்துநகர், ஐயப்பன் கோவில் வீதி ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

 இதேபோல் வீரபாண்டி துணை மின் நிலையத்தில் மின்பாதை அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் இன்று இந்த துணைமின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வீரபாண்டி பிரிவு முதல் ஜே.ஜே.நகர் வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Veerapandi ,
× RELATED ஈரோடு பகுதியில் நாளை மின் தடை