10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜன. 22: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு ஓய்வு ஊதியர் சங்க மாவட்ட தலைவர் சண்முகம், மாநில செயலாளர் ராஜகோபாலன் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர் மணியன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்

இதில் பழிவாங்கும் நோக்குடன் போடப்பட்ட கோவை மாவட்ட சங்க நிர்வாகிகளின் மாவட்ட மாறுதல் ஆணைகளை ரத்து செய்ய வேண்டும்,2019 ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற வளர்ச்சித்துறை ஊழியர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட 17 பி உள்ளிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 150 மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Related Stories:

>