×

ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி

திருப்பூர், ஜன. 22: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவினையொட்டி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் விஜயகார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் 32வது சாலை பாதுகாப்பு மாத விழா கடந்த 18ம் தேதி முதல் வரும் பிப்.17ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாநகர போலீசார், திருப்பூர் வடக்கு, தெற்கு வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில் பொதுமக்களிடையே ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியினை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி பல்லடம் சாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி நகரின் முக்கிய சாலைகளின் வழியாக வீரபாண்டி திருப்பூர் தெற்கு வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் நிறைவடைந்தது. இந்நிகழ்வின் போது வட்டார போக்குவரத்து அலுவலர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Awareness rally ,
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி