×

வெள்ளமோடி அருகே விபத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் படுகாயம்

குளச்சல், டிச. 31: அம்மாண்டிவிளை அருகே உள்ள வெள்ளமோடி பகுதியை சேர்ந்தவர் மகிழ்ச்சி (56). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் மணவாளக்குறிச்சியில் இருந்து ஊருக்கு பைக்கில் வந்துகொண்டிருந்தார். வெள்ளமோடி அருகே வீட்டிற்கு திரும்பும்போது மணவாளக்குறிச்சி பெரியவிளையை சேர்ந்த ரின்சோ ரீகன்(20) என்பவர் மற்றொரு பைக்கில் வந்தார். ரின்சோ ரீகன் முன்னால் சென்ற காரை முந்தி செல்லும்போது, மகிழ்ச்சி சென்ற பைக்கில் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட மகிழ்ச்சி படுகாயம் அடைந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து மகிழ்ச்சியின் மனைவி பொன்தாமரை வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : Vellamodi ,Kulachal ,Giddhis ,Ammandivilai ,Manavalakurichi ,Rinso Reagan ,Periyavilai ,Manavalakurichi… ,
× RELATED துவரங்குறிச்சி அருகே சாலையை சீரமைக்க கேட்டு மக்கள் மறியல்