அங்கன்வாடி மையத்துக்கு பூமி பூஜை

பொள்ளாச்சி, ஜன.22: பொள்ளாச்சி நகராட்சி 32வது வார்டுக்குட்பட்ட அண்ணபூரணி லே அவுட்டில், அங்கன்வாடி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, ரூ.9லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜையும், ரூ.5 லட்சத்தில் அப்பகுதியில் நடைபாதை அமைக்க பூமி பூஜையும்   நடைபெற்றது.நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் தலைமை தாங்கினார்.

கோவை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். இதில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து கட்டுமான பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், நகராட்சி இன்ஜினியர் மேனகா, கோவை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் ஜேம்ஸ்ராஜா, நகர பொருளாளர் கனகராஜ், மாவட்ட பிரதிநிதி அருணாச்சலம், கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>