கொரோனா ஊரடங்கால் மாரியம்மன் கோயில் தேர் திருவிழா ஒத்திவைப்பு

பொள்ளாச்சி, ஜன.22:  பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேர்திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். தை மாதம் இறுதியில் கம்பம் நடப்பட்டு, மாசி மாத இறுதியில் வெள்ளி தேர் திருவிழா என ஒரு மாதத்திற்கு இவ்விழா களை கட்டும், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவதால், திருவிழாவை காண நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஆயிரகணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வுகளுடன் தொடர்வதால் முக்கிய விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடப்பது தவிர்க்கப்பட்டுள்ளன. இதில், வரும் மாசி மாதம் மாரியம்மன் கோயிலில் நடக்கும்  தேர்திருவிழாவானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பலகையை, கோயில் நிர்வாகம்  வைத்துள்ளது.அதில், கொரோனா காரணமாக, பக்தர்களின் நலன் கருதி, தேர்திருவிழா ஒத்திவைக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகரில் ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக கொண்டாடப்படும், மாரியம்மன் கோயில் தேர்திருவிழா, இந்தாண்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Related Stories:

>