சிம்மவாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா குற்றவாளியை பிடிக்கமுயன்ற தனிப்படை போலீசை இரும்பு கம்பியால் தாக்கி தப்பிய கும்பல்

திருச்சி, ஜன.22: திருச்சியில் குற்றவழக்கில் சம்மந்தப்பட்ட நபரை பிடிக்க முயன்ற தனிப்படை போலீஸ்காரர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் விஜய் (23). இவர் மீது கடந்த மாதம் ஏற்பட்ட தகராறு குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் ஆபாசமாக பேசுதல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து தேடி வந்தனர். மேலும், தனிப்படை போலீசாரும் விஜய்யை தேடி வந்தனர். இதற்கிடையில், நேற்று இரவு 8.50 மணிக்கு தனிப்படையை சேர்ந்த வேல் (32) என்ற போலீஸ்காரர் சங்கிலியாண்டபுரத்தில் இருந்து கிராப்பட்டியில் உள்ள வீட்டிற்கு பைக்கில் புறப்பட்டார்.அவருக்கு முன்னதாக பிளவர் மில் அருகே மொபட்டில் விஜய் மற்றும் 2 பேர் சென்றனர். அவர்களை கண்டதும் வேகமாக சென்ற வேல், விஜய்யின் மொபட்டை மறித்து நின்றார். இதில் ஆத்திரமடைந்த விஜய்யின் நண்பர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் போலீஸ்காரர் விஜய் மண்டையில் தாக்கினார். இதில் மண்டை உடைந்த நிலையில் கீழே விழுந்த நிலையில் அங்கிருந்து விஜய் உள்பட 3 பேர் தப்பினர். தலையில் அடிப்பட்ட நிலையில் ரத்தக் காயத்துடன் அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் விஜய் அனுமதிக்கப்பட்டார். தனிப்படை போலீஸ்காரரை தாக்கி தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>