புத்தாநத்தத்தில் நாளை குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை முகாம்

திருச்சி, ஜன.22: திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜன.23ம் தேதி (நாளை) ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பங்கு பெறும் ஆண்களுக்கு அரசு வழங்கும் ஈட்டுத்தொகை ரூ.1,100 வழங்கப்படும். ஓரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் அறுவை சிகிச்சை செய்யப்படும். இந்த அறுவை சிகிச்சையால் பின் விளைவுகள் ஏதும் இருக்காது. எனவே, விருப்பமுள்ள ஆண்கள் இந்த அறுவை சிகிச்சையை செய்து கொள்ளலாம் என்று குடும்பநலம் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 7904019938, 8838662019, 0431 - 2460695 இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மனச்சுமைகளுடன் பணி

திருச்சி மாநகரில் குற்றவாளிகளை கண்டறிய எஸ்ஐ தலைமையில் கைதேர்ந்த தனிப்படை போலீசார் களத்தில் இருந்தனர். தற்போது குற்றவாளிகளை கண்டறிவதில் போலீசாருக்கு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையாக பேசப்பட்ட தமிழக போலீசார் பல்வேறு மனசுமைகளுடன் (டார்ச்சர்) பணிபுரிந்து வருவது வேதனை அளிக்கிறது.

Related Stories:

>