திருச்சியில் பனிமூட்டம் திருவெறும்பூரில் பாஸ்ட்புட் கடைக்காரர் தற்கொலை

திருவெறும்பூர், ஜன.22: திருச்சி திருவெறும்பூர் எழில்நகர் கேஸ் குடோன் அருகே நேற்று முள்காட்டில் மரத்தில் ஆண் சடலம் தொங்குவதாக திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து இறந்தவர் யார் என விசாரணை நடத்தியதில் திருவெறும்பூர் எழில்நகர் முல்லை தெருவை சேர்ந்த பழனிசெல்வம்(42) என்பது தெரியவந்தது. இவர் இதே பகுதியில் பாஸ்ட்புட் கடை நடத்தி வந்தார். திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். பழனிசெல்வத்துக்கு குடிபழக்கம் இருந்தது தெரிந்தது. அதிக கடன் காரணமாக தினமும் குடித்துவிட்டு வந்ததாலும் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் திரும்பி வரவில்லை. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் முள்காட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories:

>