தீர்மானம் நிறைவேற்றம் திருவெறும்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகைகள் கொள்ளை

திருவெறும்பூர், ஜன.22: திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவை திறந்து 4 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி திருவெறும்பூர் அருகே தேவராயநேரி புது காலனியை சேர்ந்தவர் கோசங்கு (48). கூலி தொழிலாளி. இவரது மனைவி அருகில் உள்ள ஹெல்மெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் வீட்டை பூட்டிவிட்டு கோசங்கு திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்திற்கு ெசன்று விட்டார். அவரது மனைவி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் மாலை கோசங்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் இருந்த பீரோ கதவை உடைத்து உள்ளே வைத்திருந்த 4 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக கோசங்கு துவாக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>