திமுக முதன்மை செயலாளர் தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு 25ம் தேதி மவுன அஞ்சலி திமுகவினர் பங்கேற்க மாவட்ட பொறுப்பாளர், செயலாளர் அழைப்பு

திருச்சி, ஜன.22: திருச்சியில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கம் செலுத்தும் மவுன அஞ்சலி ஊர்வலம் நிகழ்ச்சி முதன்மை செயலாளர் கே.என்.நேரு எம்எல்ஏ தலைமையில் நடைபெறுகிறது. இதுகுறித்து திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், தாய்மொழியாம் தமிழ்மொழி காக்க இன்னுயிர் நீத்த தமிழ்மொழி காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் மவுன அஞ்சலி ஊர்வலம் திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட சார்பில் வரும் 25ம் தேதி மாலை 4 மணிக்கு திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு எம்எல்ஏ தலைமையில் நடைபெறுகிறது. இதில் முன்னாள் எம்பி ஏகேஎஸ் விஜயன், பேராசிரியர் சபாபதி மோகன், தாம்பரம் ஜின்னா, மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன், மாநகர செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

திருச்சி கே.டி தியேட்டர் அருகில் இருந்து புறப்படும் மவுன ஊர்வலம் சாஸ்திரி ரோடு, அண்ணாநகர் வழியே உயிர்நீத்த தியாகிககள் சண்முகம், சின்னசாமி ஆகியோர் கல்லறைக்கு சென்று அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும். அதன் அருகே வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, சபாபதி மோகன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். அதேபோல் துறையூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஏகேஎஸ் விஜயன், தாம்பரம் ஜின்னா ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

எனவே மவுன அஞ்சலி மற்றும் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள், மாவட்ட, மாநகர நிர்வாகிகள், அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், முன்னாள் இந்நாள் எம்எல்ஏக்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்று மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

Related Stories:

>