மதுரை : காதல் திருமணம் என்பது பங்குச்சந்தை போல, ஏற்றமும் உண்டு, இரக்கமும் உண்டு என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மாயமான மகளை மீட்டுத்தரக்கோரி திருவெறும்பூரைச் சேர்ந்த கருப்பண்ணன் மதுரை ஐகோர்ட் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில் நீதிபதிகள் வேல்முருகன், ஜோதிராமன் அமர்வு,”குழந்தைகளின் எதிர்காலம் கருதி பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர், காதலிக்க அல்ல. காதலிக்கும் பிள்ளைகள், பெற்றோரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்,” இவ்வாறு தெரிவித்தது.
