கொரடாச்சேரியில் ஒன்றிய குழு கூட்டம்

நீடாமங்கலம், ஜன.22: கொரடாச்சேரி ஒன்றியக் குழு சாதாரண கூட்டம் ஒன்றியக் குழு துணைத் தலைவர் பாலச்சந்தர் தலைமையில் நடந்தது. வட்டார வருவாய் அலுவலர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் சத்தியேந்திரன்(திமுக), இயேசுராஜ்(அதிமுக), வாசு(திமுக), கவிதா(இந்திய கம்யூ.) ஆகியோர் சேதமான பயிர்களுக்கு நிவாரணம், பாசன வாய்க்கால்கள் தூர்வாருதல், சாலை சீரமைப்பு, ஊராட்சியில் அடிப்படை வசதிகள் குறித்து பேசினர். கவுன்சிலர்கள் ஜெயசித்ரா, சாந்தி சேகர், ஆனந்தன், ஊராட்சி ஒன்றிய மேலாளர் முரளி, வேளாண் வட்டார உதவி வளர்ச்சி அலுவலர் துரைராஜ், வட்டார கல்வி அலுவலர் சம்பத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இறுதியாக ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்தர் நிறைவுரையாற்றினார்.

Related Stories:

>