மன்னார்குடியில் நடந்தது ஆலங்குடி ஊராட்சியில் திமுக மக்கள் கிராமசபை கூட்டம்

வலங்கைமான், ஜன.22: வலங்கைமான் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலங்குடி ஊராட்சியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆலங்குடி ஊராட்சித் தலைவர் மோகன் பேசுகையில், ஆலங்குடி பகுதியில் இருந்து சென்னை செல்ல விரும்புவோர் நீடாமங்கலம் சென்று ரயிலில் ஏறி நீடாமங்கலம், தஞ்சை, கும்பகோணம் வழியாக சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்கும் பொருட்டு நீடாமங்கலத்தில் இருந்து குடந்தைக்கு ரயில் மார்க்கம் ஏற்படுத்தி தர வேண்டும். நவக்கிரகங்களில் ஒன்றாக போற்றப்படும் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் வரும் வகையில் சென்னையில் இருந்து ஆலங்குடிக்கு பஸ்கள் இயக்க வேண்டும். ஆலங்குடி பகுதியில் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகின்றது, அதற்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தர வேண்டும். வேளாண் சார்ந்த இப்பகுதியில் வைக்கோல் உள்ளிட்ட வேளாண் பொருட்களை கொண்டு மாற்றுப் பொருட்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்ய ஏற்ற வகையில் தொழில் துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

Related Stories:

>