விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

ஊட்டி,ஜன.22: விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஊட்டியில் விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத்திய பா.ஜ., அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஏடிசி., சுதந்திர திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமை வகித்தார். பொருளாளர் மண்ணரசன், குன்னூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் சுதாகர், ஊட்டி சட்டமன்ற தொகுதி செயலாளர் கட்டாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரபிரபு கலந்து கொண்டு பேசினார். இந்த ஆர்பாட்டத்தின் போது, மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>