கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3.26 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

*8வது சுற்று முகாம் துவக்கம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், 3,26,480 கால்நடைகளுக்கு 8வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாமினை கலெக்டர் மற்றும் எம்எல்ஏ துவக்கி வைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், எருமாம்பட்டி ஊராட்சி கூரம்பட்டியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கோமாரி நோய் தடுப்பூசி 8வது சுற்றுமுகாமை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர் எம்எல்ஏ மதியழகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இது குறித்து கலெக்டர் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 26 ஆயிரத்து 480 மாட்டின கால்நடைகளுக்கு, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், 8வது சுற்று கால் மற்றும் வாய்நோய் (கோமாரி) தடுப்பூசி முகாம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், எருமாம்பட்டி ஊராட்சி கூரம்பட்டி கிராமத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் 210 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசி முகாமானது, வருகிற 2026 ஜனவரி 28ம் தேதி வரை, ஒரு மாத காலம் நடைபெறவுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், முன்கூட்டியே அறிவிக்கப்படும் தேதிகளில், கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும். முகாம்களுக்கு வரும் கால்நடை உரிமையாளர்கள், தங்களின் ஆதார் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை கண்டிப்பாக தடுப்பூசி குழுவினரிடம் வழங்க வேண்டும்.

பின்னர், கால்நடைகளுக்கு காது வில்லைகள் அணிவிக்கப்பட்டவுடன், தடுப்பூசி போடப்படும். எனவே, கால்நடை வளர்ப்போர் தடுப்பூசியை தங்கள் கால்நடைகளுக்கு போட்டுக் கொண்டு, நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர் மதியழகன் எம்எல்ஏ ஆகியோர், கால்நடை வளர்ப்போருக்கு தாது உப்பு கலவைகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் டாக்டர். மோகன்குமார், ஆவின் பொது மேலாளர் டாக்டர். சிவக்குமார், கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநர் டாக்டர்.ராமகிருஷ்ணன், உதவி இயக்குநர்கள் டாக்டர். மகேந்திரன், டாக்டர். ரவிச்சந்திரன், கால்நடை மருத்துவர்கள் ரமேஷ், ஆர்.ரமேஷ், உதவி மருத்துவர்கள் ராஜி, திருமுருகன், சுரேஷ், புவனேஸ்வரி, ஆவின் துணை பொது மேலாளர் டாக்டர்.

குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், கால்நடை ஆய்வாளர்கள் சின்னசாமி, முனியப்பன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் டேவிட்ராஜ், மாது, மீனாட்சி, திமுக மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், திமுக ஒன்றிய செயலாளர் மகேந்திரன், காவேரிப்பட்டணம் முன்னாள் பேரூர் செயலாளர் பாபு, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் விமலாமணி, பெரியசாமி, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பாஸ்கர், நாகராஜன், மகேந்திரன் மற்றும் கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டனர்.

Related Stories: