ஊட்டி - கிண்ணக்கொரை பகுதிக்கு முறையாக பஸ் இயக்க கோரிக்கை

ஊட்டி,ஜன.22: நீலகிரி மாவட்டத்தின் எல்லைப் பகுதியாக கிண்ணக்கொரை கிராமம் உள்ளது. ஊட்டியில் இருந்து சுமார் 70 கி.மீ., தூரம் உள்ள இப்பகுதியில் இருந்து நாள் தோறும் ஏராளமான பொதுமக்கள், அரசு அலுவலரகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வந்துச் செல்கின்றனர். மேலும், மாலை நேரங்களில் கல்லூரி முடித்துவிட்டு மஞ்சூர், கிண்ணக்கொரை, கைகாட்டி, பெங்கால் மட்டம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் மாணவர்கள் இந்த பஸ் மூலம் சென்று வந்தனர். இந்நிலையில், இந்த பஸ் கடந்த சில நாட்களாக முறையாக இயக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.

பெரும்பாலான நாட்கள் இந்த பஸ்கள் இயக்கப்படாத நிலையில், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், மஞ்சூர் பகுதியில் இருந்து கிண்ணக்கொரை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் வாகனங்களை எடுத்துச் சென்றால், அதிக வாடகை கேட்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஊட்டியில் இருந்து கிண்ணக்கொரை செல்லும் அரசு பஸ்சை முறையாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: