வாக்காளர்களே வரும் 25ம் தேதி முதல் இணையதளம் மூலம் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்யலாம்

கோவை, ஜன. 22: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக பொது மக்கள் வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களிலும், சிறப்பு முகாம்களிலும், ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கின்றனர். வருவாய்த் துறை சார்பில் விண்ணப்பங்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து விண்ணப்பித்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. புதிய வாக்காளர் அடையாள அட்டையை வருவாய்த் துறை அலுவலகங்களுக்கு சென்று பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்நிலையில் புதிதாக விண்ணப்பித்தவர்கள் ஆதார் அட்டை போன்று வாக்காளர் அடையாள அட்டையையும் இணையதளம் மூலம் பதிவிறக்கும் செய்துகொள்ளும் புதிய நடைமுறை கொண்டுவரப்படவுள்ளது. இந்த நடைமுறை நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினமான வரும் ஜனவரி 25ம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘முதல்கட்டமாக கோவையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதற்கு பின்பு விண்ணப்பித்தவர்கள் புதிய வாக்காளர் அடையாள அட்டையை ஜனவரி 25ம் தேதிக்குப் பின் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பின் போது அளிக்கப்பட்ட தொலைப்பேசி எண், பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பயன்படுத்தி வாக்காளர்கள் அடையாள அட்டையை பதிவிறக்கும் செய்துகொள்ள முடியும்’’ என்றனர்.

Related Stories:

>