ஈரோடு மஞ்சள் மார்க்கெட் 2 நாள் விடுமுறை

ஈரோடு, ஜன. 22: ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் ஆண்டு பொது மகாசபை கூட்டம் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. இதனால், 25ம் தேதி மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து அடுத்த நாள்(26ம் தேதி) குடியரசு தினம் என்பதால் அன்றும் விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே, 25,26ம் தேதி இரண்டு நாட்களிலும் அனைத்து வணிகர்களும் மஞ்சள் ஏலத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள். மீண்டும், 27ம் தேதி அன்று வழக்கம்போல மஞ்சள் ஏலம் நடக்கும் என ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>