சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பேரணி

ஈரோடு, ஜன. 22: தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஈரோடு சம்பத் நகர் பகுதியில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் இரு சக்கர வாகன பேரணி நடந்தது. இந்த பேரணியை ஈரோடு கலெக்டர் கதிரவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணியானது ஈரோடு கொங்கு கலை அரங்கத்தில் துவங்கி, சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. பேரணியில் 200 மகளிர்கள் தலைகவசம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியில், ஈரோடு எஸ்பி தங்கதுரை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் கணபதி, ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பதுவைநாதன், கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பிரதீபா உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: