மைலம்பாடி விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் தொடக்கம்

ஈரோடு, ஜன. 22: பவானி மைலம்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வருகின்ற 28ம் தேதி முதல் வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய், நிலக்கடலை மறைமுக ஏலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் போட்டி விலை மூலம் கொள்முதல் செய்யலாம். நிலக்கடலை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் கல், மண், தூசி நீக்கி, தரம் பிரித்து புதன்கிழமை மாலை 4 மணிக்குள் கொண்டு வர வேண்டும். தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள், தரம் பிரித்து வியாழன் அன்று காலை, 8 மணிக்குள் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வர வேண்டும்.

விற்பனையாகும் விளை பொருளுக்கான தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.  எனவே விவசாயிகள் தங்களது வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முகப்பு பக்கம் நகல் வழங்க வேண்டும் என்று ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>