பைக் திருடிய 2 வாலிபர்கள் கைது

ஈரோடு, ஜன. 22:  ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாபுஜீ (29). எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் முன் பைக்கை நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் (நேற்று) காலை பாபுஜி எழுந்து பார்த்தபோது, அவரது பைக்கை காணவில்லை. இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பைக்கை தேடி

வந்தனர்.

இந்நிலையில், இன்ஸ்பெக்டர் கோபிநாத் நேற்று கருங்கல்பாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து அவர்களை ஸ்டேஷன் அழைத்து சென்று நடத்திய விசாரணையில், அவர்கள் சேலம் மாவட்டம் ஓமலூர் கருப்பணம்பட்டியை சேர்ந்த மணி மகன் ராகுல் (21), அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், இருவரும் பாபுஜீ பைக்கை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்கள் திருடிய பைக்கை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>