மைனர் பெண்ணை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

சத்தியமங்கலம், ஜன.22: கடலூர் மாவட்டம் மூலகுப்பம் கிராமம் நடுவீராம்பட்டு காலனியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது 17 வயது மகள் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்துள்ள விண்ணப்பள்ளி பகுதியில் இயங்கிவரும் தனியார் மில்லில் தங்கி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் மூலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த இவரது உறவினரான விஷ்வா (20) என்ற வாலிபர் கடந்த ஜனவரி 11ம் தேதி  மில்லுக்கு சென்று மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து பெண்ணின் தந்தை ரவிச்சந்திரன் புஞ்சை புளியம்பட்டி போலீசில் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் விஷ்வாவை பிடித்து விசாரித்தனர். இதில் மைனர் பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்து சென்றதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் விஷ்வா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்து கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>