விரகனூரிலிருந்து வைகை நீர் கிருதுமால் நதிக்கு திறப்பு

திருச்சுழி. ஜன.22: விரகனூரிலிருந்து வைகை நீரை கிருதுமால் நதிக்கு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி  திறந்து வைத்து பேசியதாவது: மதுரை மாவட்டம், விரகனூரிலிருந்து கிருதுமால் நதி வழியாக விருதுநகர் மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பயன்பெரும் வகையில்  கிருதுமால் ஆற்றுப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், குடிநீர் கிணறுகளின் நீர் ஊற்று திறனை அதிகரிக்கச் செய்யவும், கிருதுமால் நதிக்கு வைகையாற்று  தண்ணீரிலிருந்து 19ம் தேதி முதல் 24ம்தேதி வரை  நான்கு நாட்களுக்கு 400 கன அடி வீதமும் மற்றும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு 400 கன அடி வீதமும் ஆக மொத்தம் 450 மில்லியன் கன அடிநீர் வைகை  அணையில் இருந்து திறந்து விடப்படும்.

இதனால்  விருதுநகர் மாவட்டங்களில் 48 கண்மாய்கள், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 73 கண்மாய்கள் மூலம் சுமார் 18ஆயிரத்து 240 ஏக்கர் விவசாய நிலங்கள்  பயன்படுமென அமைச்சர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட கலெக்டர் அன்பழகன், விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன், மதுரை எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, விருதுநகர் அதிமுக மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மச்சேஸ்வரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பிரபாத் வர்மன், நரிக்குடி யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் பால்ச்சாமி, ஒன்றிய துணை சேர்மன் அம்மன்பட்டி ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கத்தலைவர் ராமசுப்பிரமணியன், வைகை கிருதுமால் நதி பாசன விவசாயிகள் சங்க செயலாளர் ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: