- லட்சுமி நாயக்கன்பட்டி
- அழகர்
- நாயக்கன்பட்டி
- தே. மீனாட்சிபுரம்
- தம்மிநாயக்கன்பட்டி
- மேலச்சிந்தலாச்சேரி
- சிந்தலச்சேரி
தேவாரம், டிச. 30: தேவாரம் அதனை சுற்றியுள்ள லட்சுமிநாயக்கன்பட்டி, அழகர் நாயக்கன்பட்டி, தே.மீனாட்சிபுரம், தம்மிநாயக்கன்பட்டி, மேலசிந்தலைச்சேரி, தே.சிந்தலைச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகமான அளவில் கால்நடைகள் வளர்ப்பு தொழில் நடைபெற்றது. மாடுகளில் நாட்டு தொழுமாடுகள், பசுமாடுகள் வளர்த்து வந்தனர். பால் தேவை தவிர, நாட்டு மாடுகளின் கன்றுகளை விற்பனை செய்வது வழக்கமாக இருந்தது. மிகவும் லாபகரமான தொழிலாக இருந்தது. தற்போது இந்த பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சியின் காரணமாக, ஆடு-மாடு வளர்ப்புத் தொழில் குறைந்துள்ளது.
