வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள், கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜன.22: கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் அனைத்து கட்சி, இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று புதிய வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட அமைப்பாளர் பாலகுரு, ஒன்றிய அமைப்பாளர் கேசவன், திருவள்ளுவர் விவசாயிகள் சங்கம் கலைமணி, திமுக நிர்வாகிகள் பாலபாரி, ஜெயப்பாண்டியன், பாலகுரு, சீதாபதி, அருள்தாஸ், பாமக நிர்வாகிகள் கலியமூர்த்தி, அன்பழகன், காங்கிரஸ் நிர்வாகிகள் சபீல்ரகுமான், துரை.செந்தில், அமமுக நிர்வாகிகள் பொன் மனோகரன், விஜயபாலன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: