நயினார் கனவு காணட்டும் தமிழ்நாட்டில் பாஜவுக்கு இடம் இல்லை: கனிமொழி எம்பி பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் பாஜவுக்கு இடம் இல்லை என்பதை நயினார் நாகேந்திரன் புரிந்துகொள்ள வேண்டும் என்று கனிமொழி எம்பி தெரிவித்தார். திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, நேற்று சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்டு சென்றார்.

முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
திமுக தேர்தலுக்கு மட்டும் மக்களை சந்திக்கும் கட்சி அல்ல. முதலமைச்சரிலிருந்து திமுகவில் உள்ள அனைத்து தலைவர்களும் தொடர்ந்து கூட்டங்களை நடத்தி கொண்டு வரும் இயக்கம் தான் திமுக. தேர்தல் நேரத்தில் எல்லா இயக்கங்களும், மாநாடுகள் நடத்துவது வழக்கம். ஆனால் இதற்கு முன்னதாகவே, மகளிர், இளைஞர்களை சந்திக்கும் கூட்டங்களை திமுக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது.

இந்தியா கூட்டணி உடைந்து விடும் என்று நயினார் நாகேந்திரன் ஆசைப்படுவதற்கு எல்லாம், நான் பதில் கூற முடியாது. அவர் இந்தியா கூட்டணி உடைந்து விடும் என்று கனவு கண்டு கொண்டு இருக்கிறார். அவர் கனவு காண்பது தவறில்லை. அவர் கனவு கண்டு கொண்டே இருக்கட்டும். ஆனால் நிச்சயமாக, தமிழ்நாட்டில் பாஜவுக்கு இடம் இல்லை என்பதை நயினார் நாகேந்திரன் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: