விவசாயிகள் கோரிக்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள ஓட்டுநர், சமையலர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

புதுக்கோட்டை, ஜன. 22: புதுக்கோட்டை அரசு மரு த்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள ஓட்டுநர், சமையலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பூவதி தெரிவித்ததாவது: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதன்படி ஒரு ஓட்டுநர் பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இனசுழற்சி முறை பொதுப்பிரிவினரில் முன்னுரிமை பெற்றவர். கல்வி தகுதியாக 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சலவையாளர் பணியிடம் 3 காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இனசுழற்சி முறை பொதுப்பிரிவினரில் முன்னுரிமை பெற்றவர், மிகவும் பிற்பட்ட வகுப்பினரில் முன்னுரிமை பெற்றவர், பிற்பட்ட வகுப்பினரில் முன்னுரிமை பெற்றவர் தகுதியானவர்கள். கல்வி தகுதியாக தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

மேலும் காலியாக உள்ள 7 சமையலர் பணியிடத்துக்கு இனசுழற்சி முறை பொதுப்பிரிவினரில் முன்னுரிமை பெற்றவர், மிகவும் பிற்பட்ட வகுப்பினரில் முன்னுரிமை பெற்றவர், பிற்பட்ட வகுப்பினரில் முன்னுரிமை பெற்றவர் தகுதியானோர். பொதுப்பிரிவினரில் முன்னுரிமை அற்றோர் பிரிவில் ஆதரவற்ற விதவை (பெண்), ஆதிதிராவிடர் முன்னுரிமை பெற்றவர், மிகவும் பிற்பட்ட வகுப்பினரில் முன்னுரிமை அற்றோர் பிரிவில் ஆதரவற்ற விதவை (பெண்), பிற்பட்ட வகுப்பினரில் முன்னுரிமை அற்றோர் பிரிவில் ஆதரவற்ற விதவை (பெண்) விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதியாக தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

முடிதிருத்துபவர் ஒரு பணியிடத்துக்கு இனசுழற்சி முறை பொதுப்பிரிவினரில் முன்னுரிமை பெற்றவர் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதியாக தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இந்த காலி பணியிடங்களுக்கான வயது வரம்பு 1.12.2020 அன்று ஆதிதிராவிடர் அதிகபட்சம் 35, குறைந்தபட்சம் 18 ஆகவும், பழங்குடியினர் அதிகபட்சம் 35 ஆகவும் குறைந்தபட்சம் 18 ஆகவும் இருக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிகபட்சம் 32 ஆகவும் குறைந்தபட்சம் 18 ஆகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிகபட்சம் 32 ஆகவும், குறைந்தபட்சம் 18 ஆகவும், இதர வகுப்பினர் அதிகபட்சம் 30 ஆகவும் குறைந்தபட்சம் 18 ஆகவும் இருக்க வேண்டும்.

இதற்கு மனுதாரர்கள் தங்களது அனைத்து கல்விச்சான்று, ஜாதிச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை (ஆன்லைன் பிரிண்ட் அவுட்), ஆதரவற்ற விதவை என்பதற்கான தாசில்தாரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் நகல், நிலையான இருப்பிட முகவரிக்குரிய சான்று நகல்களுடன் முதல்வர், முதல்வர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுக்கோட்டை மாவட்டம் என்ற முகவரிக்கு வரும் 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: