33 சதவீதத்திற்கு மேல் சேதமடைந்த நெற்பயிர்களை விடுபடாமல் சேர்க்க வேண்டும்

விராலிமலை, ஜன.22: 33 சதவீதத்திற்கு மேல் சேதமடைந்த நெற்பயிர்களை விடுபடாமல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்று கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தி உள்ளார். விராலிமலை வட்டாரத்தில கடந்த வாரத்திற்கு முன் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் சேதம் அடைந்தன. இது தொடர்பாக சென்னை வேளாண்மை இயக்குநகரத்தில் இருந்து சேதமான பயிர்களை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் முரளிதரன் விராலிமலை அருகே உள்ள பேராம்பூர் மற்றும் கேமங்கலம் பகுதியில் சேதமடைந்த பயிர்களை கள ஆய்வு செய்தார்.

பின்னர் கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்படும் பயிர் சாகுபடி அடங்கல் குறிப்புகளை சரிபார்த்த கண்காணிப்பு அலுவலர் 33 சத வீதத்திற்கு மேல் பாதிப்படைந்த நெல் பயிர்களை விடுபடாமல் வேளாண்மை துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் கூட்டாக கள ஆய்வு செய்து அறிக்கையினை உரிய படிவத்தில் அரசுக்கு சமர்பிக்க கேட்டு கொண்டார். இந்த ஆய்வின் போது புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் மோகன் ராஜ், விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராமு, வேளாண்மை அலுவலர் ஷீலாராணி, உதவி வேளாண்மை அலுவலர் அருண்குமார், பேராம்பூர் விஏஓ செல்லபாண்டி, கோமங்கலம் விஏஓ பாலமுருகன் உள்ளிட்டோர் இந்த ஆய்வின் போது உடன் சென்றனர்.

Related Stories: