×

தொடர் விடுமுறையால் முதுமலைக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

கூடலூர் : கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முதுமலையை ஒட்டிய கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் மற்றும் நாகர்ஹோலே சரணாலயங்களில் வாகன சவாரி உள்ளிட்ட சுற்றுலா நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் முதுமலையில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

கடந்த நான்கு நாட்களில் சுமார் 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தந்துள்ளனர். முதுமலை வனப்பகுதிகளில் வாகன சவாரி செய்யவும், யானைகள் முகாமில் யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை பார்க்கவும் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் இங்கு வந்திருந்தனர். ஊட்டியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் கர்நாடக மாநிலம் திரும்பி செல்வதால் சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.

Tags : Koodalur ,Old Mountain Tigers Archive Depakat ,Christmas ,New Year ,Karnataka ,State Bandhipur Tigers Archive ,Nagarhole Sanctuaries ,
× RELATED காஞ்சி காமாட்சியம்மன் கோயில்...