மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்

பெரம்பலூர், ஜன.22: தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க பெரம்பலூர் மாவட்டத் தலைவர் பாரதிவளவன் தலைமையில் சங்க நிர்வாகிகள், வருவாய்த் துறை அலுவலர் சங் கத்தின் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றக் கோரி பெரம்ப லூர் மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியாவிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தலை நகரங்களில் அடிப்படைப் பயிற்சி மற்றும் நில அளவை பயிற்சி வழங்கப்பட வேண்டும். கருணை அடிப்படையிலான நியமனதாரர்களின் பணியினை வரன் முறை செய்யும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர்களு க்கு வழங்கி ஆணையிட வேண்டும். மாவட்டங்களில் அதிகளவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், மசால்சி, பதிவுறு எழுத்தர் மற்றும் ஜீப் ஓட்டுநர் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்தரவாதம் செய்து உடனே தீர்வு காண வேண்டும். ஜாக்டோ ஜியோ பாதிப்புகளை உடனே சரி செய்திட வேண்டும். சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியினை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். நிறுத்தம் செய்யப்பட்ட அகவிலைப்படி மற்றும் சரண்டர் விடுப்புகள் உடனே வழங்கிட வேண்டும். பேரிடர் மேலாண்மை மற்றும் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணி இடத்தை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். நிகழ்ச்சியின்போது, சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஷாஜஹான், பொருளாளர் சிவா, மத்திய செயற்குழு உறுப்பினர்கள் தாசில்தார் அருளானந்தம், குமரிஆனந் தன் மற்றும் மகளிர் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Related Stories: