ஆய்வாளர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும் துணைவேந்தர் பேச்சு

காரைக்குடி, ஜன.22:  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வணிகவியல் துறை சார்பில் சமூக அறிவியல் ஆய்வு முறை தர வழிமுறைகள் என்ற தலைப்பில் இணையதளம் வாயிலாக கருத்தரங்கம் நடந்தது. உதவி பேராசிரியர் கனகவல்லி வரவேற்றார். துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், ‘‘சமூக பிரச்னைகளை தெரிந்துகொண்டு அதனை ஆய்வு செய்து அதற்குரிய தீர்வுகளை வழங்குவது சமூக அறிவியல் ஆய்வின் நோக்கமாகும். சமூகத்தை திறம்பட நிர்வகிக்க சமூக அறிவியல் ஆய்வின் பரிந்துரைகள் அரசிற்கு தேவைப்படுகிறது.

ஆய்வு வெளியீடுகள், அவற்றை எத்தனை ஆய்வாளர்கள் பயன்படுத்துகின்றனர் என்பதை பொறுத்து ஆய்வின் தரம் அமைகிறது. பல்துறை இணைந்த ஆய்வு இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியம். ஆய்வாளர்கள் தொடர்ந்து படிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். துறைத்தலைவர் பேராசிரியர் குருமூர்த்தி, கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் மாவூத்தூ உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவிபேராசிரியர் மேனகா நன்றி கூறினார்.

Related Stories: