காரைக்காலில் புதிதாக 8 பேருக்கு கொரோனா

காரைக்கால், ஜன. 22: காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 68,476 பேருக்கு கொரோனா மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 20ம் தேதி 801 பேருக்கு பரிசோதனை செய்ததில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் நல்லம்பல் பகுதியை சேர்ந்த 6 பேருக்கும், திருநள்ளாறு மற்றும் வரிச்சிக்குடியை சேர்ந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 3,862 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டு 3,765 பேர் குணமடைந்துள்ளனர். 32 பேர் வீட்டு தனிமையிலும், சிகிச்சையிலும் இருந்து வருகின்றனர்.

Related Stories:

>