நாகூர் சிவன் குளத்தில்

நாகை, ஜன. 22: நாகூர் குளத்தில் இறந்தவர் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகூர் சிவன் குளத்தில் 55 வயது நிறைந்த ஆண் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் நாகூர் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்துக்கு சென்று அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் பச்சை கலர் கட்டம் போட்ட சட்டை, நீலநிற பேண்ட், கழுத்தில் சிலுவையும் அணிந்திருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மழை, வெயிலால் சிரமப்படும் வியாபாரிகள்

நேரு மார்க்கெட் கட்டி முடித்த பின்னும் பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் தற்காலிக மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் வேதனையடைந்தனர். அதற்குள் கொரோனா ஊரடங்கால் தற்காலிக நேரு மார்க்கெட்டும் மூடப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அரசின் உத்தரவுகளை அங்கு கடைபிடிக்க முடியாது என்பதால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட நேரு மார்க்கெட்டில் இருந்த கடைகள் அருகில் உள்ள திடலுக்கு மாற்றப்பட்டன. இதனால் வெயில், மழையில் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

Related Stories: