கிராம விழிப்புணர்வு காவல் அதிகாரி நியமன தொடக்க விழா

வேதாரண்யம், ஜன. 22: வேதாரண்யம் தாலுகா காவல் சரகங்களில் உள்ள ஒவ்வொரு காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள தாய் கிராமங்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தலைமை காவலரை நியமனம் செய்து அரசு உத்தரவிட்டது. அதன்படி வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம் நாலுவேதபதி கிராமத்தில் அதன் தொடக்க விழா நடந்தது. நாகை எஸ்பி ஓம் பிரகாஷ் மீனா தலைமை வகித்து துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் ஞானசுந்தரி சுந்தரபாண்டியன், வேதாரண்யம் காவல் சரக துணை கண்காணிப்பாளர் மகாதேவன், கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முனியாண்டி முன்னிலை வகித்தனர். விழாவில் அந்த கிராமத்திற்கு வேட்டைக்காரனிருப்பு காவல் சரகத்தில் பணிபுரியும் தலைமை காவலர் கண்ணனை நியமனம் செய்து அறிமுகப்படுத்தி எஸ்பி ஓம் பிரகாஷ் மீனா பேசினார். விழாவில் திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories: