திருவெற்றியூர்,பாசிபட்டினம் பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கப்படுமா?

தொண்டி, ஜன.22:   தொண்டியை சுற்றிலும் ஏராளமான வழிபாட்டு தலங்கள் உள்ளது. ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் தொண்டி வழியாகத்தான் செல்கிறார்கள். அதனால் தொண்டி அருகில் உள்ள திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில், பாசிபட்டினம் சர்தார் நெய்னார் முகம்மது தர்ஹா, ஓரியூர் தேவாலம் மற்றும் காரங்காடு சதுப்புநில காடுகள் என பல்வேறு இடங்களுக்கு  செல்கின்றனர்.

மேலும் தொண்டியில் கடலில் கட்டப்பட்டுள்ள சிரிய ஜெட்டி பாலத்தை காணவும் அதிகம் பேர் வருகின்றனர். இப்பகுதிகளை சுற்றுலாதலமாக அறிவிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதிகாரிகள் உரிய நடவடி–்ககை எடுகக வேண்டும். தமுமுக தலைவர் காதர் கூறியது, தொண்டி வரலாற்று சிறப்பு மிகக ஊர். ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகள் தொண்டி கடல் பகுதிக்கும் வருகின்றனர்.

ஆனால் இங்கு எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. அதனால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதேபோல் திருவெற்றியூர், பாசிபட்டினம் ஓரியூர் உள்ளிட்ட இடங்களிலும் போதிய வசதி மற்றும் பஸ் வசதி கூட கிடையாது. சுற்றுலாதலமாக அறிவிக்கும் பட்சத்தில் இப்பகுதியின் தரம் மேம்படும். அதனால் அரசு உடனடியாக இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: