சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி மகளிர் டூவீலர் விழிப்புணர்வு பேரணி

கரூர், ஜன. 22: கரூர் மாவட்ட போக்குவரத்து துறையின் சார்பில் 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் இரண்டு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து துவக்கிய இந்த பேரணியை கலெக்டர் மலர்விழி, எஸ்பி பகலவன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பேரணியில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்எல்ஏ கீதா உட்பட ஏராளமான மகளிர்கள் டூவீலர் ஓட்டிச் சென்றனர். இந்த பேரணி, தாந்தோணிமலை, சுங்ககேட் வழியாக திருவள்ளுவர் மைதானத்தை அடைந்தது. கலந்து கொண்ட அனைவரும் தலைக்கவசம், முகக்கவசம் போன்றவை அணிந்து சென்றனர். இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைவரும் சாலை பாதுகாப்பு விதிகளை அறிந்து பின்பற்றி நடக்க வேண்டும். இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணத்திற்கு சீட்பெல்ட் அணிந்து செல்ல வேண்டும். சாலை விதிகளை சரியாக கடைபிடித்து பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றார். கல்லு£ரி மாணவ, மாணவிகள் வாகனத்தை ஓட்டும் போது தலைக்கவசம் அணிந்து வருங்கால சந்ததியினர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் டிஆர்ஓ ராஜேந்திரன், தமிழ்நாடு அரசு கரூர் மண்டல போக்குவரத்து மேலாளர் குணசேகரன் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: