பணி நிரந்தரம் கோரி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர், ஜன. 22: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் வாங்கப்பாளையம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ராணி தலைமை வகித்தார். அங்கன்வாடி பணியாளர் சங்கத்தினர் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதேபோல், இந்த அமைப்புகளின் சார்பில் குளித்தலை மற்றும் க.பரமத்தி ஆகிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. குளித்தலை : கரூர் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் குளித்தலை ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் பத்மாவதி தலைமை வகித்தார். இதில் குளித்தலை ஒன்றியத்திற்குட்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>